ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது
கொரோனா பரவல் தடை எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது
கரூர்
கரூர் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நாளில் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான வழிபாட்டு தலங்கள் மற்றும் காவிரி கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. நெரூரில் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்கும் பொருட்டு போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் நெரூர் காவிரி ஆற்று பகுதியில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. மேலும் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் மூடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story