ஆலோசனை கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காரியாபட்டி தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் தனக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை) விஜயகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்து விட கூடாது என்பதற்காக தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. வருவாய் துறை சார்பாக பல்வேறு நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறோம். கொரோனா தடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் முழுமையாக செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நலிந்தோர் திட்ட தாசில்தார் சிவக்குமார், மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பொன்பகவதி, ராமலிங்கம், சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story