வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 4 Aug 2021 3:00 AM IST (Updated: 4 Aug 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் டவுன் வடக்கு மாதவி சாலையில் உள்ள சாமியப்பா நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம் (வயது 47). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில் மும்தாஜ் பேகம் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மைசூர் சென்று விட்டார். நேற்று அருகில் உள்ள வீட்டுக்காரர் மும்தாஜ் பேகத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மர்ம ஆசாமிகள் சுற்றுச்சுவர் கேட் பூட்டை மாற்றுச்சாவி போட்டு திறந்து கிரில் கேட் பூட்டு, கதவை நெம்பி உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை நெம்பி உடைத்து, பணம்- நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதில் அரை பவுன் தோடு, பர்சில் வைத்திருந்த  ரூ.7 ஆயிரம் ஆகியவை திருட்டு போனதாக மும்தாஜ் பேகம் புகார் செய்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story