கர்நாடகத்தில் புதிதாக 1,674 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,674 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 1,674 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பரிசோதனைகள்
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 21 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,674 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 9 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 1,376 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 49 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 280 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 1.38 ஆக உள்ளது.
38 பேர் சாவு
பெங்களூரு நகரில் 477 பேர், தட்சிண கன்னடாவில் 307 பேர், ஹாசனில் 104 பேர், மைசூருவில் 147 பேர், உடுப்பியில் 104 பேர், துமகூருவில் 80 பேர், உத்தரகன்னடாவில் 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 7 பேரும், தட்சிண கன்னடாவில் 8 பேரும், மைசூருவில் 4 பேரும், துமகூரு, கோலார், ஹாசன், சிக்பள்ளாப்பூரில் தலா 2 பேரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story