தா.பேட்டை அருகே பட்டப்பகலில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
தா.பேட்டை அருகே பட்டப்பகலில் மூதாட்டியிடம் 8 பவுன் தங்கதாலி கொடியை பறித்து சென்றனர்.
தா.பேட்டை அருகே பட்டப்பகலில்
மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
தா.பேட்டை, ஆக.4-
முசிறி பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி (வயது 73). இவரது மனைவி ராஜேஸ்வரி (68). இவர்களது மகன் சரவணகுமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு முசிறி அருகே வளையெடுப்பு கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மொபட்டில் சென்றனர். அப்போது ஜெம்புநாதபுரம் - தா.பேட்டை செல்லும் சாலையில் மங்கலம் பிரிவுரோடு அருகே மொபட்டை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கதாலி கொடியை திடீரென பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் மூதாட்டி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story