மாவட்ட செய்திகள்

சாலையில் நாய் குறுக்கிட்டதால் விபரீதம்: மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் பலி + "||" + On the road Because the dog interfered From the moped Failed woman killed

சாலையில் நாய் குறுக்கிட்டதால் விபரீதம்: மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

சாலையில் நாய் குறுக்கிட்டதால் விபரீதம்: மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
சென்னை, சாலையில் நாய் குறுக்கிட்டதால் விபரீதம்: மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
சென்னை, 

சென்னை கே.கே.நகர் 14-வது தெருவை சேர்ந்தவர் ரேவதி (வயது 47). இவரது மகள் ராகவி (25). கடந்த மாதம் 31-ந்தேதி இரவு உணவு வாங்க தாயும், மகளும் மொபட்டில் ஓட்டலுக்கு சென்றனர். மகள் ராகவி வண்டியை ஓட்ட, தாய் ரேவதி பின்னால் அமர்ந்து சென்றார். இரவு உணவு வாங்கி விட்டு கே.கே.நகர் பி.டி. ராஜன் சாலை வழியாக வீடு திரும்பினர்.

கே.கே.நகர் சிவன் பூங்கா அருகே சென்ற போது, நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடி வந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ராகவி, நாயின் மீது மோதாமல் இருக்கு பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழந்தனர். ராகவி ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் பின்னால் அமர்ந்திருந்த ரேவதியின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.