வேலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை


வேலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2021 6:41 PM IST (Updated: 4 Aug 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த இ.கவுதம் (குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story