விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்காவை கண்டித்தும், அமெரிக்கா ஆதரவு நிலையை பா.ஜ.க. அரசு கைவிட வலியுறுத்தியும் பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சேது தொடங்கி வைத்து பேசினார்.
கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ரவீந்திரன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மாவட்ட அமைப்பாளர் மோட்சம், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க செயலாளர் கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா குழு உறுப்பினர் செல்வகுமார், கட்டுமான சங்க பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story