வெளிநாட்டிற்கு அனுப்புவதாக ரூ.10 லட்சம் மோசடி


வெளிநாட்டிற்கு அனுப்புவதாக ரூ.10 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 Aug 2021 8:45 PM IST (Updated: 4 Aug 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக ரூ.10 லட்சம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமக்குடி, 
வேலூர் மாவட்டம் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது22). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி முத்துவயல் கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்படி சதீஷ் ஆன்லைன் மூலமாக காளீஸ்வரனுக்கு ரூ.10 லட்சம் வரை அனுப்பியுள்ளார். பின்பு அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. உடனே அனுப்பிய பணத்தை திரும்ப தருமாறு காளீஸ்வரனின் சொந்த ஊரான முத்துவயல் கிராமத்திற்கு சென்று சதீஷ் பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவரை காளீஸ்வரன், அபிமன்யு 2 பேரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சதீஷ் சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சதீஷ், அபிமன்யு 2 பேர் மீதும் சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story