வடமதுரையை தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டும்; இளைஞர் காங்கிரசார் கலெக்டரிடம் மனு
வடமதுரையை தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டும் என்று மாவட்ட இளைஞர் காங்கிரசார் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் கவுதம் ஜெயசாரதி தலைமையிலான கட்சியினர், மாவட்ட கலெக்டர் விசாகனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வடமதுரை ஒன்றியம் 345 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 13 ஆயிரத்து 974 மக்கள் உள்ளனர். மேலும் 1976-ம் ஆண்டு வரை வடமதுரை சட்டமன்ற தொகுதியாக இருந்தது. அதன் பின்னர் அது வேடசந்தூர் தொகுதியாக மாறியது. வடமதுரை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி ெரயில் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிளை நூலகம், மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் போன்ற அலுவலகங்களை கொண்ட முக்கிய நகரமாக வடமதுரை விளங்கி வருகிறது. ஆனால் வடமதுரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே வடமதுரையை தனி தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story