உடுமலை அருகே மளிகைக்கடைக்காரரின் வீட்டிற்கு வந்து தங்கிய இடத்தில் 37 பவுன் நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.


உடுமலை அருகே மளிகைக்கடைக்காரரின் வீட்டிற்கு வந்து தங்கிய இடத்தில் 37 பவுன் நகைகளை திருடியவரை  போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 4 Aug 2021 9:46 PM IST (Updated: 4 Aug 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே மளிகைக்கடைக்காரரின் வீட்டிற்கு வந்து தங்கிய இடத்தில் 37 பவுன் நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை
உடுமலை அருகே மளிகைக்கடைக்காரரின் வீட்டிற்கு வந்து தங்கிய இடத்தில் 37 பவுன் நகைகளை திருடியவரை  போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பூலாங்கிணர் முக்கோணம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையைச்சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 39). இவர் உடுமலையை அடுத்து பூலாங்கிணர் முக்கோணம் பகுதியில் ஆனைமலை சாலையில் மளிகைக்கடை வைத்துள்ளார். வீட்டின் முன்பகுதியில் மளிகை கடையும், பின் பகுதியில் வீடும் உள்ளது. இவரது ஊரான திசையன்விளைக்கு அருகில் உள்ள இட்டமொழியை சேர்ந்தவர் திரவியகுமார் (32). இவர் சிலஆண்டுகளுக்கு முன்பு உடுமலையில் உள்ள மளிகைப்பொருட்கள் மொத்த விற்பனை கடையில் வேலை செய்து வந்தார். அதனால் ஜெயமுருகனுக்கும், திரவியகுமாருக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 12 மணியளவில் திரவியகுமார், முக்கோணத்தில் உள்ள ஜெயமுருகனின் வீட்டிற்கு வந்துள்ளார். 
அங்கு அவர் காலை சாப்பிட்டு விட்டு ஜெயமுருகனிடம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரை வீட்டில் இருக்கச்சொல்லிவிட்டு கடைக்குமளிகைப்பொருட்கள் வாங்குவதற்காக, ஜெயமுருகன் உடுமலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மளிகைக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். திரவியகுமார், வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்தார். இந்த நிலையில் உடுமலைக்கு சென்று மளிகைப்பொருட்களை வாங்கிய ஜெயமுருகன் மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவரிடம் திரவியகுமார், தான் ஊருக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
37 பவுன் நகைகள் திருட்டு
அதன் பிறகு 2 நாட்கள் கழித்து ஜெயமுருகன், துணிக்கடைக்கு செல்வதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த செயின், ஆரம், வளையல், கம்மல் உள்ளிட்ட 37 பவுன்  நகைகளை காணவில்லை. இதுகுறித்து ஜெயமுருகன் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் நகைகளை திரவியக்குமார் தான் திருடி சென்று விட்டதாக தெரிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 
இதையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் உத்தரவின்பேரில் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (உடுமலை பொறுப்பு) சிவக்குமார், உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்- இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திரவியக்குமாரை கைது செய்தனர்.
கைது
அவரிடமிருந்து 37 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட திரவியகுமார் திருமணம் ஆனவர். மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். திரவியகுமார் தெலுங்கானாவில் மிட்டாய் கடையில் வேலை, டிரைவர் வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். மனைவியும், குழந்தைகளும் தெலுங்கானாவில் உள்ள நிலையில், திரவியகுமார் சொந்த ஊரான இட்டமொழி சென்று வருவதற்காக வந்தார்.
வழியில் ஜெயமுருகனின் வீட்டிற்கு வந்த இடத்தில் தனது கைவரிசையை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட திரவியகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 17-ந்தேதிவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி திரவியகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story