பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சமையல் தொழிலாளியை வெட்டிய அக்காள் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சமையல் தொழிலாளியை வெட்டிய அக்காள் கைது.
மோகனூர்,
மோகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 80) இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் 3 பேருக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதில் முருகேசன் (40) என்பவர் தனது மனைவியை பிரிந்து சமையல் தொழிலாளியாக வேலை செய்து கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக தாய் சின்னபொண்ணுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் முருகேசன் வாழப்பாடியில் வசித்து வரும் தனது சின்ன அக்காள் காஞ்சனாவுக்கு (50) ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பணம் வாங்கி கொடுத்த இடத்தில் வட்டியோ, அசலோ கட்டவில்லை என்று தெரிகிறது. இதையொட்டி ஏன் இப்படி பண்ணுகிறாய்? என அக்காவிடம் பணம் கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காஞ்சனா அங்கிருந்த அரிவாள் மனையை எடுத்து முருகேசன் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மோகனூர் போலீசில் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து தம்பியை வெட்டிய காஞ்சனாவை கைது செய்து சேலத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story