திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 87-ல் இருந்து 92-ஆக நேற்று உயர்ந்தது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகினார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 87ல் இருந்து 92ஆக நேற்று உயர்ந்தது.
திருப்பூர்;
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 87-ல் இருந்து 92-ஆக நேற்று உயர்ந்தது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகினார்.
92 பேருக்கு கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே நேற்று தமிழகம் முழுவதும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி 87-ல் இருந்த பாதிப்பு நேற்று 92-ஆக உயர்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒருவர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 72-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 124 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 335-ஆக உள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 891 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ஒருவர் பலியாகினார். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 846-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story