ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி. 7 பேர் படுகாயம்


ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி. 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Aug 2021 10:06 PM IST (Updated: 4 Aug 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி. 7 பேர் படுகாயம்

ஜோலார்பேட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நாகமங்களம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் மோகன் (வயது31). இவர் நேற்று காலை அசாம் மாநிலத்தில் இருந்து வந்த 7 தொழிலாளர்களை ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் இருந்து, பர்கூரில் அமைந்துள்ள சிப்காட் கம்பெனிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மங்கம்மாகுளம் பகுதியில் திடீரென ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மோகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்திருந்த  அசாம் மாநிலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்களும்  படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story