ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மன்னார்குடியில், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மன்னார்குடி:
அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மன்னார்குடியில், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொருளாளர் புண்ணீஸ்வரன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காந்தி, சிறப்பு தலைவர் ரத்தினகுமார், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணைத்தலைவர் மணி, நகர தலைவர் தனிக்கொடி, நகர செயலாளர் சரவணன், அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் பாப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாலாபாண்டியன், ஒன்றிய செயலாளர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறைந்த சம்பளத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நோயாளிகளின் சுகாதாரம் கருதி மருத்துவமனையில் நவீன சலவை வசதியை ஏற்படுத்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்து மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story