பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் புகார் அளிக்கலாம்
பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் புகார் அளிக்கலாம் என்று வால்பாறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வால்பாறை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போலீசார் விழிப்புணர் ஏற்படுத்தினர். இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் தனியாக வெளியே வரவேண்டாம். வேலைக்கு செல்லும் போதும், வேலை முடிந்து வீடு திரும்பும்போதும் கூட்டமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
மேலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது பாலியல் தொல்லைகள், துன்புறுத்தல் அல்லது உங்களை பாதிக்கக்கூடிய எந்த செயல்களாக இருந்தாலும் அது குறித்து பெண்களுக்கான பாதுகாப்பு உதவி மையத்திற்கு 181 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.
தொடர்ந்து, அவர் அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி காயமடைந்த வசந்த்பிரபாகரன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.
Related Tags :
Next Story