உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஒன்றியம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட படிவம்-1, 2 மற்றும் அதன் தொடர்புடைய படிவம், வாக்காளர் பட்டியல் மற்றும் 249 வாக்குச்சாவடிகளுக்கான படிவங்கள் 1 முதல் 10 மற்றும் 1 முதல் 23 ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து இந்திலி ஊராட்சியில் சமுதாயக்கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சின்னசேலம், தியாகதுருகம்
பின்னர் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளர் விரைவுப் பட்டியல் படிவத்தை 2001 சட்டமன்ற வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு சரி பார்த்த கலெக்டர் ஸ்ரீதர் பங்காரம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட உள்ள 3 வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளர் விரைவுப் பட்டியல் படிவம் மற்றும் 2021 சட்டமன்ற வாக்காளர் பட்டியலுடன் சரிபார்த்த அவர் தொடர்ந்து வடதொரசலூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட உள்ள 8 வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து வாக்குச்சாவடி மையங்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்திடவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அலுவலர்களுக்கு உத்தரவு
இதன் பின்னர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இ்ந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) குமாரி, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சொக்கநாதன், ராஜேந்திரன், அண்ணாதுரை, செல்வகணேஷ் மற்றும் உதவிப்பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story