திருப்பூரில் மாணவி தீக்குளித்து தற்கொலை
திருப்பூரில் மாணவி தீக்குளித்து தற்கொலை
வீரபாண்டி
திருப்பூரில் அதிகநேரம் செல்போன் பயன்படுத்தியதற்காக பெற்றோர் திட்டியததால் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவி
சிவகங்கை மாவட்டம் நேரு தெருவைச் சேர்ந்தவர் மாகாளிதாஸ் (வயது 53). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் திருப்பூர் கோழிப்பண்ணை கே.என். கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மூத்த மகள் லதா ( 22). பிளஸ்-2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பம் கொடுத்துள்ளார். இவர் வீட்டில் இருந்த போது செல்போனை அதிகமாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் லதாவை கண்டித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாகாளிதாஸ் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு வேலைகளை பார்க்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த லதாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த லதா திடீரென்று வீட்டின் உள்ளே சென்று கதவை தாழிட்டு மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் லதா அலறினார்.
சாவு
அவருடைய அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அருகில் இருப்பவர்கள் கதவை உடைத்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லதா இறந்து விட்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் விரைந்து வந்து லதாவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story