2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு


2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 5 Aug 2021 1:53 AM IST (Updated: 5 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் போலீசாருக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகரில் நேற்று இரண்டாம் நிலை போலீசாருக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இந்நகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினிமேற்பார்வையில் தொடங்கிய இத்தேர்வுக்கு 500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 496 பேர் கலந்து கொண்டனர். இதில் 419 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  நேற்று நடந்த தேர்வில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்வில் 1,425 பேர் தேர்வான நிலையில் 2-ம் கட்ட தேர்வு நாளை வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் 2-ம் நிலை பெண் போலீசாருக்கான 2-ம் கட்ட தகுதி தேர்வு நடைபெறும்.


Next Story