விழிப்புணர்வு முகாம்


விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 Aug 2021 2:19 AM IST (Updated: 5 Aug 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

காரியாப்பட்டி அருகே ெகாரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே ஆவியூர் போலீஸ் சோதனை சாவடியில் கொரோனா தடுப்புக்காக மதுரை பகுதியிலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் நுழையும் பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வரும் நபர்கள் முறையாக முக கவசம் அணிந்து உள்ளார்களா என சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடுப்பூசி போடாதவர்களுக்கு சோதனை சாவடி அருகே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் தனக்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன் முன்னிலை வகித்தார். மாவட்ட தனித்துனை ஆட்சியர் (முத்திரை) விஜயகுமார் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜெயலட்சுமி, பால்பாண்டி, அரசு மருத்துவர்கள் மாமல்லன், ராஜ் சுந்தர், சண்முகம், சுகாதார ஆய்வாளர் முத்துமுணியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Next Story