கிருஷ்ணன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
மார்த்தாண்டம் அருகே கிருஷ்ணன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கிருஷ்ணன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணன் கோவில்
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் விஜயகுமார் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.
கொள்ளை
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இரவு நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கையில் இரும்பு ஆயுதத்துடன் கோவிலின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து கோவில் உள்ளே வரும் காட்சி பதிவாகியிருந்தது.
அதைதொடர்ந்து மர்ம நபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றார்.
வலைவீச்சு
கடந்த 2 மாதமாக உண்டியல் திறக்கப்படவில்லை என்பதால், உண்டியலில் சுமார் ரூ.18 ஆயிரம் வரை இருந்ததாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் குறித்து விசாரணை நடத்தி மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story