ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.
மூடாமல் விடப்பட்ட குழி
முப்பந்தல் அருகே சாலையில் இருந்து சுமார் 200 அடி தொலைவில் மிகப்பெரிய ஆழ்குழாய் கிணறு அமைக்க குழி தோண்டப்பட்டது. தண்ணீர் இல்லாததால் மூடாமல் அப்படியே குழியை விட்டு சென்று விட்டனர்.
அந்த குழியை உடனடியாக மூட வேண்டும், இல்லாவிட்டால் அசம்பாவிதம் நடந்து விடும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி, ‘தினத்தந்தி’யில் படத்துடன் வெளிவந்தது.
மூடப்பட்டது
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடனே இன்ஸ்பெக்டர் மீனா, தோவாளை தாசில்தார் தாஜ்நிஷாவிடம் பேசினார். அதன்பிறகு ஆரல்வாய்மொழி வடக்கு கிராம நிர்வாக உதவியாளர் நபீல், ஆரல்வாய்மொழி பேரூராட்சி பணியாளர்கள் மூலம் திறந்த வெளியில் இருந்த ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டப்பட்ட குழியை மூடினார்.
இதன் அருகில் ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டப்பட்ட இன்னொரு குழியும் மூடப்படாத நிலையில் இருந்தது. அந்த குழியையும் மூடினார்கள். இந்த செய்தியை வெளியிட்டு குழியை மூடுவதற்கு காரணமாக இருந்த, ‘தினத்தந்தி’-க்கும், மூட நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story