ஆத்தூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை


ஆத்தூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Aug 2021 4:48 AM IST (Updated: 5 Aug 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 பெத்தநாயக்கன்பாளையம்:
ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக மோகன் (வயது 45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், இரவு 9.45 மணி அளவில் கடையை பூட்டி விட்டு மது விற்ற ரூ.6 லட்சத்து 11 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து சென்றார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மோகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளி உள்ளனர். பின்னர் மோகன் வைத்திருந்த ரூ.6 லட்சத்து 11 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Next Story