'கேட்' நுழைவுத்தேர்வுக்கு 30-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


கேட் நுழைவுத்தேர்வுக்கு 30-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:15 AM GMT (Updated: 2021-08-05T15:45:07+05:30)

'கேட்' நுழைவுத்தேர்வுக்கு 30-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு என்ஜினீயரிங் பட்டதாரி திறன் தேர்வு என்று அழைக்கப்படும் ‘கேட்' என்கிற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 24-ந் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வை காரக்பூர் ஐ.ஐ.டி. நடத்த இருக்கிறது.

Next Story