உன்னிச்செடிகள் அகற்றும் பணி


உன்னிச்செடிகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 5 Aug 2021 7:41 PM IST (Updated: 5 Aug 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் உன்னிச்செடிகள் அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் வனச்சரகம், சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு உடையதாகும். இங்கு யானைகள், மான்கள், காட்டெருமைகள், மலைப்பாம்புகள், முயல்கள், பச்சோந்திகள், உடும்புகள் ஆகியவை உள்ளன. மேலும் தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், அரியவகை மூலிகை செடிகளும் காணப்படுகின்றன.

இந்தநிலையில் வனப்பகுதியில் உன்னிச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த செடிகளால் பிற மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைக்கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் முதற்கட்டமாக 20 ஹெக்டர் பரப்பளவிலான உன்னிச்ெ்சடிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி உன்னிச்செடிகளை அகற்றும் பணியில் ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில் தலைமையில், வனவர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story