அரசின் ஒப்புதலோடு கனிமவள கொள்ளைக்கு முயற்சிக்கும் கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும்


அரசின் ஒப்புதலோடு கனிமவள கொள்ளைக்கு முயற்சிக்கும் கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:37 PM IST (Updated: 5 Aug 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

அரசின் ஒப்புதலோடு கனிமவள கொள்ளைக்கு முயற்சிக்கும் கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவின் விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டுவரும் அதானி குழுமத்தின் துறைமுகப்பணிகளுக்காக அம்மாநிலத்தின் 19 குவாரிகளில் அனுமதி கேட்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக 3 குவாரிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து பாறைகளை எடுத்துச்செல்வதில் தமிழகத்தில் உள்ள சில மாவட்ட கலெக்டர்களால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது. அதைச் சரிசெய்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அம்மாநில துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் கனிமவளங்கள் சூறையாடப்பட்டு முறைகேடாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியுடன் நாளும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், வாகனங்களை கொண்டு செல்வதற்கு உள்ள கெடுபிடிகளைத் தளர்த்தக்கோரி கடிதம் எழுதியிருக்கும் கேரள அரசின் செயல் கன்னியாகுமரி மக்களிடையே கொந்தளிப்பையும், பெரும் சீற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே, கனிவள கொள்ளையை அரசின் ஒப்புதலோடே செய்ய முயலும் கேரள அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திட வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி, மேற்கு தொடர்ச்சி மலையைக் காத்து, கனிமவள கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story