சிறுபூலுவப்பட்டி ரிங்ரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்களில் புழுதி பறக்கும் அவலநிலை உள்ளது.
சிறுபூலுவப்பட்டி ரிங்ரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்களில் புழுதி பறக்கும் அவலநிலை உள்ளது.
அனுப்பர்பாளையம், ஆக. 6-
சிறுபூலுவப்பட்டி ரிங்ரோட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும்
அரசு அலுவலகங்களில் புழுதி பறக்கும் அவலநிலை உள்ளது.
குண்டும் குழியுமான சாலைகள்
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு காலேஜ் ரோடு 15 வேலம்பாளையத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும் இதே சாலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம், 15 வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இருப்பதால் அரசு மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றனர்.
ஆனால் சிறுபூலுவப்பட்டி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை தார்சாலை என்பதே இல்லை. முற்றிலும் மண்ரோடாக காட்சியளிக்கும் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
குப்பைகள் நிரம்புகிறது
இதேபோல் அந்த சாலையில் பறக்கும் புழுதி சாலையோரம் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையத்திற்குள் புகுவதால் அங்கு அதிகாரிகள் உட்கார்ந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் அங்குள்ள ஆவணங்களும் தூசி நிரம்பி அழுக்காக காணப்படுவதுடன், அலுவலக வளாகங்கள் முழுவதும் குப்பை நிரம்பி காணப்படுகிறது.
சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் தார்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பாதாள சாக்கடை பணி நிறைவடைந்த பிறகு தார்சாலை அமைக்க நீண்ட நாள் ஆகும் என்பதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ள சாலையை தற்காலிகமாக சீரமைத்து, தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story