காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம்
உத்தமபாளையம் போலீஸ் உட்கோட்ட அளவில் காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம் கம்பத்தில் நடந்தது.
கம்பம்:
உத்தமபாளையம் போலீஸ் உட்கோட்ட அளவில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 33 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பந்தப்பட்ட போலீசார் உடன் வந்திருந்தனர்.
இந்த முகாமில் காணாமல் போனவர்களைப் பற்றி போலீசாருக்கு கிடைத்த புகைப்படங்கள், அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் காண்பிக்கப்பட்டு விசாரணை நடத்தினார்.
விரைவில் காணாமல் போனவர்கள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் துணை சூப்பிரண்டு கூறினார்.
Related Tags :
Next Story