ரூ.3½ கோடி மோசடி; கணக்காளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ரூ.3½ கோடி மோசடி தொடர்பாக தனியார் நிறுவன கணக்காளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை,ஆக
திருப்பத்தூரை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பன். இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் மல்லாக்கோட்டையைச் சேர்ந்த ராஜூநாராயணன் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2010 முதல் 2017-ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் கம்பெனியில் இருந்து முறைகேடு செய்து ஆன்லைன் மூலமாக ரூ.3½ கோடி வரை தனது பெயர் மற்றும் மனைவி, உறவினர்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளப்பன் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி ராஜூ நாராயணன் (வயது 40), அவரது மனைவி எழிலரசி (36), உறவினர்கள் பெரிய கருப்பன் (65), பாண்டி செல்வி (35), வேல்முருகன் (37), தங்கவேலு (50) ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story