வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு


வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 5 Aug 2021 11:26 PM IST (Updated: 5 Aug 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரர்கள் வருகிற 27-ந்தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக்கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Next Story