மளிகைகடைக்காரரிடம் நகை, பணம் பறித்த 2 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 Aug 2021 11:38 PM IST (Updated: 5 Aug 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

மளிகைகடைக்காரரிடம் நகை, பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்
கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள வெங்க கல் பட்டியை சேர்ந்தவர் சதீஷ்(வயது 23). மளிகைக்கடை நடத்தி வரும் இவர் நேற்று முன்தினம் கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், சதீஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சதீஷ் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சதீஷிடம் பணம் பறித்த  கல்லுமடையை சேர்ந்த வசந்தகுமார்(21) மற்றும் சோமூரை சேர்ந்த ராகுல்(18) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story