நிதி நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
நிதி நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
புதுக்கோட்டை மாவட்டம் வேலம் பாடியை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 27). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பஸ் நிலையம் பின்புறம் உள்ள மளிகைக்கடை அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சரத்குமார்(22) என்பவர் சிவராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.300 பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சிவராஜ் கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story