ஊழல் வழக்கு எடியூரப்பா, நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


ஊழல் வழக்கு எடியூரப்பா, நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2021 9:03 PM GMT (Updated: 2021-08-06T02:33:17+05:30)

ஊழல் வழக்கில் நேரில் ஆஜராக கூறி எடியூரப்பாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

பெங்களூரு: 2019-21-ம் ஆண்டில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசின் திட்டங்களில் ஊழல் செய்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த கோரியும் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கவர்னர் அனுமதி வழங்காத காரணத்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் டி.ஜே.ஆபிரகாம் ஒரு மனுவை தாக்கல் செய்து, ஊழல் வழக்கில் விசாரணை நடத்த உத்தரவிட கோரினார். இதுகுறித்து எடியூரப்பாவுக்கு நோட்டீசு அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றபோது, எடியூரப்பா வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான சம்மனை எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரிடம் கோர்ட்டு ஊழியர்கள் நேரில் வழங்கினர்.

Next Story