சினிமா ஒளிப்பதிவாளர் பலி


சினிமா ஒளிப்பதிவாளர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 10:39 PM GMT (Updated: 2021-08-06T04:09:34+05:30)

விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சினிமா ஒளிப்பதிவாளர் பலியானார்.

விருதுநகர், 
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 22). பட்டதாரி வாலிபரான இவர் சினிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் நாமக்கல்லில் நடந்த ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு வந்தார். விருதுநகர்-சாத்தூர் இடையே மருளூத்துவிலக்கு அருகே இரவில் வந்து  கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story