நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து தொகுப்பு
ஊத்துக்கோட்டை அருகே நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து தொகுப்பு அமைச்சர் வழங்கினார்.
ஊத்துக்கோட்டை,
மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொளவேடு துணை சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட செல்லியம்மன் கண்டிகை கிராமத்தில் இந்த திட்டத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கினார்.
மூளை வளர்ச்சி குன்றியவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியோர், குழந்தைகளுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் மருத்துவம் அளிக்கும் திட்டத்தையும், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரைசந்திரசேகர், மாவட்ட கலெக்டர் டாக்டர். ஜான் ஆல்பி வர்கீஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story