சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வாகன தணிக்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 141 வாகனங்கள் ஏலம்
சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வாகன தணிக்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 141 வாகனங்கள் ஏலம்.
சென்னை,
சென்னை (மேற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வாகன தணிக்கையில் பல்வேறு காரணங்களால் 137 ஆட்டோக்கள், 1 ஷேர் ஆட்டோ, 2 டாடா மேஜிக் மற்றும் 1 பஸ் என மொத்தம் 141 வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டன.
இந்த வாகனங்கள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை சென்னை (தெற்கு) சரக இணை போக்குவரத்து ஆணையர் எம்.ஜெய்சங்கரன் ஆலோசனைப்படி, கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலம் மூலம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 600 கிடைத்தது. இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.
மேற்கண்ட தகவல் வட்டார போக்குவரத்து அலுவலரும், மதிப்பீட்டுக்குழு (வாகன ஏலம்) உறுப்பினருமான பொ.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story