சாலையை சூழ்ந்த புதர் செடிகளை வெட்டிய வனத்துறையினர்


சாலையை சூழ்ந்த புதர் செடிகளை வெட்டிய வனத்துறையினர்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:11 PM IST (Updated: 6 Aug 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

சாலையை சூழ்ந்த புதர் செடிகளை வெட்டிய வனத்துறையினர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே மாங்கமூலா கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்கு செல்ல 78 ஏரியா பகுதி வரை செல்லும் மண்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 

ஆனால் அந்த சாலை புதர் செடிகள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் காட்டுயானைகள் நின்றால் கூட தெரியாத நிலை இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கார், சாலையை சூழ்ந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வனத்துறைக்கு உத்தரவிட்டார். 

அதன்படி பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் புதர் செடிகளை வெட்டி அகற்றினர். இதனால் வனத்துறைக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story