உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கைது


உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 10:33 PM IST (Updated: 6 Aug 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கைது 8 வாகனங்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை

திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் திருநாவலூர் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் வழிமறித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(வயது 22) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 8 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 

Next Story