கோவில்களுக்கு வெளியில் நின்று பக்தர்கள் வழிபாடு
தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையொட்டி கோவில்களுக்கு வெளியில் நின்று பக்தர் வழிபாடு நடத்தினர்.
தேனி:
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவில்களுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கோவில்களுக்கு வெளியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்ததால் நுழைவு வாயிலுக்கு வெளியே விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
அதுபோல், தேனி நகரில் உள்ள கோவில்கள், போடி நாக அம்மன் புற்று கோவில், சுப்புராஜ் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில் மற்றும் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் வெளியே நின்று வழிபட்டனர். பக்தர்கள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்து கூழ் காய்ச்சி எடுத்து வந்து மற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
Related Tags :
Next Story