தமிழக கேரள எல்லையில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
தமிழக கேரள எல்லையில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
பொள்ளாச்சி
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், ஜமீன்காளியாபுரம், வடக்குக்காடு, செமனாம்பதி ஆகிய சோதனை சாவடிகளில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அந்த பஸ்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் துறை, உள்ளாட்சி துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story