முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்


முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:49 PM IST (Updated: 6 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

விசைத்தறி தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கத்தினர் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்
விசைத்தறி தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கத்தினர் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.
விசைத்தறி தொழிலாளர்கள்
திருப்பூர் மாவட்ட அனைத்து விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் முத்துசாமி சி.ஐ.டி.யு., நடராஜ் ஐ.என்.டி.யு.சி., சிவசாமிஎல்.பி.எப்., சுப்பிரமணியம்ஏ.டி.பி. மற்றும் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் வினீத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர், சோமனூர், மங்கலம், பல்லடம், அவினாசி பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கடந்த 2014 அன்று ஏற்பட்டு 87 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது ஏறியுள்ள விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் குடும்பம் நடந்த மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஒரு தொழிலாளி 10 தறிகளை 12 மணி நேரம் ஓட்டினால் கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை தான் சம்பளம் கிடைக்கும். இந்த தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளமும், பண்டிகை விடுமுறைகள் இல்லாமலும் பணியாற்றி வருகிறார்கள்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
சம்பள உயர்வு ஒப்பந்தம் முடிந்து விட்ட நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் முன்வராமல் உள்ளனர். விசைத்தறி உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போது பெற்று வரும் சம்பளத்துடன் 100 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும். அனைவருக்கும் பண்டிகை விடுமுறை, தேசிய விடுமுறைக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். அனைவருக்கும் 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச சம்பளமாக தினமும் ரூ.750 வழங்க வேண்டும். தார் ஓட்டும் பெண்களுக்கு குறைந்தபட்சம் மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.
இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி சம்பள உயர்வு பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story