வாலிபர் பலி


வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2021 10:54 PM IST (Updated: 6 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் பலி

நல்லூர்
திருப்பூர் முத்தணம்பாளையம், பாலபாக்கியா நகரில் வசித்து வந்தவர் ஷேக் முகமது மகன் உமர் பாரூக்வயது 28.பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சனுபியா 22, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் உமர் பாரூக் குடி பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு குடி போதையில் வந்துள்ளார். அப்போது அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த பாரூக் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு முத்தணம்பாளையத்தில் இருந்து நல்லுரை நோக்கி வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றுகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story