துபாயில் இறந்தவரின் உடலை கொண்டுவர மனு


துபாயில் இறந்தவரின் உடலை கொண்டுவர மனு
x
தினத்தந்தி 6 Aug 2021 10:56 PM IST (Updated: 6 Aug 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் இறந்தவரின் உடலை கொண்டுவர மனு கொடுக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது50). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் தமிழ்செல்வன். பி.காம் வரை படித்துள்ள நிலையில் துபாயில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சென்றான். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற நிலையில் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் செல் போனில் பேசி வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட பேசியபோது சொந்த ஊருக்கு விடுமுறையில் வரஉள்ளதாக தெரிவித்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் அங்கு வேலை பார்க்கும் உறவினர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு எனது மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளான். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். 2 நாட்களில் ஊருக்கு வருவதாக சொல்லிய நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்பது மர்மமாக உள்ளது. எனது மகனின் சாவிற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story