வேலூர் மாவட்டத்தில் 311 பேர் பிளஸ் 2 தனித்தேர்வு எழுதினர்


வேலூர் மாவட்டத்தில் 311 பேர் பிளஸ் 2 தனித்தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:35 PM GMT (Updated: 6 Aug 2021 5:35 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 311 பேர் பிளஸ் 2 தனித்தேர்வு எழுதினர். ஒரு மாணவர் மட்டும் துணைத்தேர்வு எழுதியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

தனித்தேர்வு

தமிழ்நாட்டில் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மற்றும் பிளஸ்-2 தனித்தேர்வு மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தனித்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இந்த எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தனித்தேர்வு எழுத 444 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று 311 பேர் தேர்வு எழுதினர். 133 பேர் தேர்வுக்கு வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டான்போஸ்கோ பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

கைதிகள் 3 பேர்

இதுதவிர வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகள் 3 பேரும் பிளஸ்-2 தனித்தேர்வு எழுதினர். அவர்களுக்கு தேர்வு எழுத ஜெயிலிலேயே வசதி செய்யப்பட்டிருந்தது. கடந்த 19-ந் தேதி வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள் துணை தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் மட்டும் நேற்று தேர்வு எழுதினார். பொய்கையில் நடந்த தனித்தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.



Next Story