குடிமைப்பொருள் அலுவலகத்தில் வீணாக கிடக்கும் வாகனங்கள்


குடிமைப்பொருள் அலுவலகத்தில் வீணாக கிடக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 6 Aug 2021 11:09 PM IST (Updated: 6 Aug 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி குடிமைப்பொருள் அலுவலகத்தில் வீணாக கிடக்கும் வாகனங்களை ஏலம் விட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி குடிமைப்பொருள் அலுவலகத்தில் வீணாக கிடக்கும் வாகனங்களை ஏலம் விட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

வீணாகி வரும் வாகனங்கள் 

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

 மேலும் கடத்தலின்போது பிடிக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொள்ளாச்சியில் உள்ள குடிமைப்பொருள் அலுவலகத்தில் நிறுத்தப் பட்டு வருகின்றன. 

தற்போது இந்த அலுவலகத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப் பட்டு உள்ளன. இவை பல ஆண்டுகளாக அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளதால், மழை மற்றும் வெயிலில் காய்ந்து துருபிடித்து வருகின்றன.

 பல ஆண்டுகளாக அந்த வாகனங்களை ஏலம்விட எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

ஏலம் விட வேண்டும் 

கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் குடிமைப்பொருள் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் அப்படியே கிடப்பதால், வீணாகி வருகிறது. 

வாகனங்களை ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

 எனவே உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து, வீணாகி வரும் வாகனங்களை ஏலம் விட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story