அரக்கோணம் அருகே முளைத்த நெல்லுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


அரக்கோணம் அருகே முளைத்த நெல்லுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2021 11:22 PM IST (Updated: 6 Aug 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள், முளைத்த நெல்லுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்

ஆர்ப்பாட்டம் 

அரக்கோணத்தை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. ஆனால் இங்கு நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

நெல் கொள்முதல் நிலையம் செயல்படாத நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள நெல்கள் முளைத்து வருவதால்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முளைத்த நெல்லுடன்

அப்போது முளைத்த நெல்லை கையில் ஏந்தி, தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்கு இடம் இல்லாததால், தங்களது வீட்டுக்குள்ளேயே நெல்லை வைத்திருப்பதாகவும்  கூறினர்.

Next Story