டிரைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
சிவகாசி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,ஆக
சிவகாசி தெய்வானை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் டிரைவர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் தினேஷ்குமார் (22), மகேந்திரன் (22), ஹரிபிரியன் (22), மாக்கான் என்கிற செண்பகராஜ் (20), வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உண்டு என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கணேஷ்குமார் (22), சிவகிரி (20) உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுவரை டிரைவர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Related Tags :
Next Story