புதுச்சேரியில் நாளை மறுநாள் ஐ.டி.ஐ.க்கள் திறப்பு


புதுச்சேரியில் நாளை மறுநாள் ஐ.டி.ஐ.க்கள் திறப்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 12:31 AM IST (Updated: 7 Aug 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாளை மறுநாள் ஐ.டி.ஐ.க்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சந்திரபிரியாங்கா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, ஆக.7-
நாளை மறுநாள்  ஐ.டி.ஐ.க்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சந்திரபிரியாங்கா தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள் மூடல்
புதுவையில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அவற்றை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
சமீபத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. அடுத்த கட்டமாக கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்தநிலையில் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.டி.ஐ.க்கள் திறப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான (ஐ.டி.ஐ.) செய்முறை மற்றும் ஆன்லைன் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வழங்கப்பட வேண்டும். செய்முறை மற்றும் ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 13-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் தொழிற்பயிற்சி நிலையங்கள் நாளை மறுநாள் முதல் (திங்கட்கிழமை)  திறக்கப்பட உள்ளன. ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் தினசரி 50 சதவீத வருகைப் பதிவேடு அடிப்படையில் (சுழற்சி முறையில்) மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story