ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.56 லட்சம் மோசடி
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.56 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர்
ரூ.56 லட்சம் மோசடி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வை.புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). காண்டிராக்டர். குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மனைவி அபிதாபேகம், மகன் ஜாகிர் உசேன். அலாவுதீன், சுரேசிடம் தன்னால் திருச்சியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் மேலாளர் உள்பட பல்வேறு வேலைகள் வாங்கித் தர முடியும் அதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய சுரேஷ், தனது உறவினர்களான வேல்முருகன், கோவிந்தராஜ், ஆகியோரிடம் இருந்து ரூ.14 லட்சம் பெற்று அபிதாபேகம், ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலையில் அலாவுதீனிடம் கொடுத்துள்ளார். மேலும் ஜெகதீசன், ரேவதி, ராஜகோபால், பெரியசாமி, ஆகியோரிடம் ரூ.42 லட்சம் பெற்று அலாவுதீனின் வங்கிக்கணக்கில் செலுத்தினார்.
3 பேர் மீது வழக்கு
ஆனால், யாருக்கும் வேலை வாங்கிக் கொடுக்காமல் அலாவுதீன் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பியூலா ஞான வசந்தி, அலாவுதீன் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story