வெண்ணாற்றில் இறங்கி செல்லும் கிராமமக்கள்


வெண்ணாற்றில் இறங்கி செல்லும் கிராமமக்கள்
x
தினத்தந்தி 7 Aug 2021 1:41 AM IST (Updated: 7 Aug 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

எடவாக்குடி ஊராட்சியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு வெண்ணாற்றில் இறங்கி கிராமமக்கள் செல்கின்றனர். உடனடியாக நடைபாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெலட்டூர்:
எடவாக்குடி ஊராட்சியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு வெண்ணாற்றில் இறங்கி கிராமமக்கள் செல்கின்றனர். உடனடியாக நடைபாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
எடவாக்குடி ஊராட்சி 
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் எடவாக்குடி ஊராட்சி உள்ளது. வெண்ணாற்றின் கரையோரம் உள்ள இந்த ஊராட்சியில் கோட்டூர், காந்தாவனம், மாடி, மூங்கில்அடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி ஆகிய கிராமங்கள் உள்ளன.  இதில் கோட்டூர், காந்தாவனம் ஒரு கரையிலும், மாடி, மூங்கில்அடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி ஆகிய கிராமங்கள் மறுகரையிலும் அமைந்துள்ளது. பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ள காந்தாவனம் கிராமத்திற்கு மாடி, மூங்கில்அடி, நெட்டாநல்லூர் மற்றும் எடவாக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் செல்ல வேண்டும் என்றால் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள களஞ்சேரி பாலம் சென்று அங்கிருந்து 4 கிலோமீட்டர் காந்தாவனம் பஞ்சாயத்து அலுவலகம் செல்லவேண்டும். பஞ்சாயத்து அலுவலகம் சென்றுவர கிராமமக்கள் 16 கிலோ மீட்டர் சென்றுவரவேண்டிய அவலம் உள்ளது.
நடைபாலம் கட்டித்த வேண்டும்
இந்தநிலையில்  எடவாக்குடி ஊராட்சியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு  வெண்ணாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி அப்பகுதி கிராமமக்கள், பெண் தொழிலாளர்கள் செல்கின்றனர். பின்னர் மீ்ண்டும் தண்ணீரில் இறங்கி எடவாக்குடி ஊராட்சிக்கு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வெண்ணாற்றில் நடைபாலம் கட்டித்தர வேண்டும் என்று எடவாக்குடி ஊராட்சி தலைவர் விஜயகுமார் மற்றும் அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

Next Story